< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் - பள்ளிக்கல்வித்துறை
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார் - பள்ளிக்கல்வித்துறை

தினத்தந்தி
|
26 May 2022 2:23 PM IST

பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.

அதன் படி,1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் பாட புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் 9 ஆயிரம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் பாட புத்தகங்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 3 இடங்களில் பள்ளி பாட புத்தகங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரமணி பாட நூல்-கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் ஆகிய இடங்களில் பாட புத்தகங்களை பெறலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்