< Back
மாநில செய்திகள்
5,008 தட்டுகளில் சீர்வரிசை எடுத்து சென்ற பெண்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

5,008 தட்டுகளில் சீர்வரிசை எடுத்து சென்ற பெண்கள்

தினத்தந்தி
|
1 Jan 2023 12:04 AM IST

5,008 தட்டுகளில் சீர்வரிசை எடுத்து சென்ற பெண்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகல் பத்து திருவிழாவில் நேற்று திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆண்டாளுக்கு 5,008 தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்துகொண்டு பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கோவில் தக்கார் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் வெங்கிடசாமி, வக்கீல் சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். விஷ்வ இந்து பரிஷத் துறவிகள் பேரவை மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக் வரவேற்று பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடத்தின் 240-வது பட்டம் ஸ்ரீசடகோபராமானுஜர் சுவாமிகள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீரெங்க ராமானுஜ ஜீயர், வீரவநல்லூர் குலசேகர ராமானுஜர் மடம் ஸ்ரீராம பிரம்மேய ராமானுஜ ஜீயர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து 80-க்கும் மேற்பட்ட பஜனை மடங்களை சார்ந்த குழுக்கள் கலந்து கொண்டு தாயார் ஆண்டாளுக்கு 5,008 தட்டுகளில் சீர்வரிசைகளை கொண்டு வந்து ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். நிகழ்ச்சியில் தமிழ் சங்க குழந்தைகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், பள்ளி மாணவர்களின் திருப்பாவை முற்றோதல் பாராயணம் நடைபெற்றது. முடிவில் நிகழ்ச்சி இணை ஒருங்கிணைப்பாளர் சண்முக ஆனந்த் நன்றி கூறினார்..

மேலும் செய்திகள்