எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள்..!
|எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை,
அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் (2022-23) அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும், வகுப்புகளை நடத்த தகுதிவாய்ந்த சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில் எல்.கே.ஜி.,யூ.கே.ஜி. வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 2,500 சிறப்பாசிரியர்களை தேர்வு செய்யவும், சிறப்பாசிரியர் நியமனத்தில் பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் சிறப்பா சிரியர்கள் நியமிக்கப்பட்டு வரும் விஜயதசமிக்குள்ளாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் செயல்படத் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.