< Back
மாநில செய்திகள்
ஒரே நிறத்தில் உடையணிந்து சங்கமித்த 500 காவலர்கள்
திருச்சி
மாநில செய்திகள்

ஒரே நிறத்தில் உடையணிந்து சங்கமித்த 500 காவலர்கள்

தினத்தந்தி
|
19 Jun 2023 2:30 AM IST

ஒரே நிறத்தில் உடையணிந்து 500 காவலர்கள் சங்கமித்தனர்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து கடந்த 1993-ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி பயிற்சி பள்ளியில் சுமார் 1000 காவலர்கள் பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் தற்போது பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாகவும், சப்-இன்ஸ்பெக்டர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த காவலர்களின் 30-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 500 காவலர்கள் ஒரே நிறத்திலான உடையணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.யும், கடந்த 1993-ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி பயிற்சி பள்ளி முதல்வராகவும் இருந்த அலெக்சாண்டர் மோகன் கலந்து கொண்டு பேசினார். இவர்கள் அனைவரும் வாட்ஸ்-அப் குழு மூலம் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், பல்வேறு பணி சுமைகளுக்கு இடையே 30 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடன் பயிற்சி பெற்ற நண்பர்களை இந்த நிகழ்ச்சி மூலம் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்