< Back
மாநில செய்திகள்
பருவமழையை எதிர்கொள்ள 500 வீரர்கள் தயார்- டிஜிபி சைலேந்திரபாபு
மாநில செய்திகள்

"பருவமழையை எதிர்கொள்ள 500 வீரர்கள் தயார்"- டிஜிபி சைலேந்திரபாபு

தினத்தந்தி
|
19 Jun 2023 11:02 PM IST

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதா

சென்னை,

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும், தமிழகத்திலும், பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் உள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தலா 100 பேரை கொண்ட 5 குழுவில் சென்னையில் 2 குழுவும், நீலகிரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் 3 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்