விருதுநகர்
500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
|ராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு நடத்தி 500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ராஜபாளையம்.
சமுதாய வளைகாப்பு
ராஜபாளையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பில் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டும் சட்டமன்ற உறுப்பினர் தனது 3 மாத ஊதியத்தில் இருந்தும் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய வளைகாப்பு விழா காமராஜர் திருமண மண்டபத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் 500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையுடன், சேலை, மற்றும் 19 வகையான உணவுவகைகள் வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
குழந்தைக்கு தமிழில் பெயர் வையுங்கள்
கருணாநிதி ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்கப்பட்டது, பெண்கள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம், பெண்கள் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் வசதி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.கர்ப்பிணிகள் அனைவரும் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தனலட்சுமி, பங்கஜம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் கல்பனா குழந்தை வேலு, ஒன்றிய துணைத்தலைவர் துரைகற்பகராஜ், டாக்டர் ராதா, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கிளை மற்றும் வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.