ராமநாதபுரம்
500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்த ஊர்க்காவல் படைவீரர் சிக்கினார்
|500 ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்த ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
500 ரூபாய் கள்ளநோட்டுகள் வைத்திருந்த ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
ஊர்க்காவல் படை வீரர்
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலூர் ஊராட்சி மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவன். இவருடைய மகன் ராஜேசுவரன் (வயது 28). இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழக கடலோர காவல் படைப்பிரிவுக்கான ஊர்க்காவல் படை வீரராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் ராஜேசுவரன் கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பதாக திருப்பாலைக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அ.மணக்குடி அருகே நின்றிருந்த ராஜேசுவரனை போலீசார் பிடித்து சோதனையிட்டனர்.
ரூ.1 லட்சம் கள்ளநோட்டுகள்
அந்த சோதனையில், அவரிடம் ரூ.1 லட்சத்துக்கான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கின. இதையடுத்து அந்த கள்ளநோட்டுகளை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.
ராஜேசுவரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது? இதன் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள்? என தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.