< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
29 April 2023 12:45 AM IST

நாகர்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை 11.45 மணியளவில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரும், தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர் மற்றும் ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு 10 பிளாஸ்டிக் பைகளில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி ஒரு மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்