< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
|12 Aug 2022 2:26 AM IST
குளச்சலில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருளரசு தலைமையிலான போலீசார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள், லியோன்நகர் பகுதியில் சென்றபோது அங்கு கேரள பதிவெண் கொண்ட ஒரு கார் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தது. போலீசார் காரின் அருகில் சென்றதும் அதில் இருந்த 2 மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு மூடைகளில் 500 கிேலா ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன்,ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.