< Back
மாநில செய்திகள்
500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
28 May 2022 1:17 AM IST

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மினி லாரியில் கடத்திய 500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓசூர்:

ஓசூர் அந்திவாடி சோதனைச்சாவடியில், மத்திகிரி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் டிரைவர் இருக்கைக்கு அருகே ரகசிய அறை அமைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வேலூர் அடுத்த மாசாப்பட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவர் விஜய் (வயது23) என்பதும், பெங்களூருவில் இருந்து வேலூருக்கு புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள், மினி லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்