< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
தாம்பரத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல்
|20 Jun 2022 12:48 PM IST
தாம்பரத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், தாமரைக்குளம் அருகில், பீர்க்கன்காரணை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அந்த நபர் பெருங்களத்தூர், கேப்டன் சசிகுமார் நகரை சேர்ந்த அப்துல்லா (வயது 35) என தெரியவந்தது.
மேலும் அவரது வீட்டில் சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அப்துல்லா மீது வழக்குப்பதிவு அவரை செய்தனர். பின்பு அவரது வீட்டில் இருந்த 500 கிலோ குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.