3 குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்
|பட்டாசு வெடிவிபத்தில் பலியான 3 குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கச்சிராயப்பாளையம்:
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த கோபிநாத் மகன் பிரபாகரன் என்கிற டோனி, ஜெய்சங்கர் மகன் அப்பாஸ்(வயது 23), பரிகம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வசந்தராஜ்(27) ஆகிய 3 பேரும் ஓசூர் அத்திப்பள்ளி பகுதிக்கு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றனர். அப்போது நடந்த வெடிவிபத்தில் 3 பேரும் பலியானார்கள். இது பற்றி அறிந்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் நேரில் சென்று 3 பேரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறி தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார். அப்போது கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் அரவிந்தன், ஒன்றியக்குழு தலைவர்கள் திலகவதி நாகராஜன், சந்திரன், துணை தலைவர் அன்புமணி மாறன், மாவட்ட கவுன்சிலர் அகிலா பானு அருள், ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி அண்ணாமலை, பரிகம் தலைவர் சஞ்சய் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.