< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
காரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு 50 மேசை, நாற்காலிகள்
|29 Aug 2022 11:54 PM IST
காரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு 50 மேசை, நாற்காலிகள். அமைச்சர்காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு மேசை, நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தனது துணைவியார் கமலா காந்தியுடன் கலந்து கொண்டு தன்னுடைய சொந்த நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 50 மேசை,மற்றும் நாற்காலிகளை பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.