< Back
மாநில செய்திகள்
ஒரு பாக்கெட் 50 ரூபாய் மெரினாவில் கூவிக்கூவி கஞ்சா விற்பனை - ஒடிசா மாநில ஆசாமி கைது
சென்னை
மாநில செய்திகள்

ஒரு பாக்கெட் 50 ரூபாய் மெரினாவில் கூவிக்கூவி கஞ்சா விற்பனை - ஒடிசா மாநில ஆசாமி கைது

தினத்தந்தி
|
23 March 2023 11:46 AM IST

மெரினாவில் ஒரு பாக்கெட் 50 ரூபாய் என்று கூவிக்கூவி கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவில் இருந்து சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள மெரினா உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் ரோந்தும் தீவிரமாக இருந்தது.

மெரினா நேதாஜி சிலை அருகில் ஒரு ஆசாமி கூவி, கூவி கஞ்சா பொட்டலங்களை விற்று கொண்டிருந்தார். பாக்கெட் கஞ்சா ரூ.50 என்று விற்றார். இதை பார்த்த மெரினா போலீசார் கஞ்சா விற்ற ஆசாமியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் தேபானந்த ராவத் (வயது 24) என்று தெரிய வந்தது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்தார்.

இதேபோல சென்னை பெரியமேடு அல்லிகுளம் பகுதியிலும் கஞ்சா வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்ட பிரதீப்கணேஷ் (34) என்பவர் கைதானார். அவரிடம் இருந்தும், 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்