< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
18 Jun 2022 11:45 AM IST

ஊத்துக்கோட்டை அருகே பெண்ணிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை தலையாரி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி பாரதி (வயது 50). சீதஞ்சேரியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை சீதஞ்சேரியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மஞ்சள் நிற சட்டை, கருப்பு கலர் பேண்ட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் பாரதி அணிந்து இருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துசென்றார்.

இது குறித்து பாரதி பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்