செங்கல்பட்டு
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்
|சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.
இவ்வாறு அமைய உள்ள ஜவுளிபூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும்.
இத்தகைய சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பு நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுசுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி).
ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள்.
உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.
மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குனர், துணிநூல் துறை, 1 எ.2/1, சங்ககிரி மெயின் ரோடு, குகை, சேலம்- 636 006, தொலைபேசி எண்- 0427-2913006 அலுவலகத்தை அணுகவும். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.