< Back
மாநில செய்திகள்
நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம்-கலெக்டர் தகவல்

image courtesy;twitter @DistrictColle12


திருப்பத்தூர்
மாநில செய்திகள்

நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம்-கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
18 Jun 2023 11:32 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க 50 சதவீதம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைத்திட மூன்று அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பயனாளியாக தேர்ந்ெதடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதத்தை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும்.

பயனாளிகள் அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆவணங்கள், மூன்று வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்