< Back
மாநில செய்திகள்
ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த 50 பேர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த 50 பேர் கைது

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

சின்னசேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த வந்த 50 பேர் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்திற்கு காவிரி நீர் தராத கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக ஆதிதிராவிடர் புரட்சிக்கழகத்தினர் அறிவித்தனர். அதன்படி அதன் தலைவர் பெரு.வெங்கடேசன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நிர்வாகிகள் நேற்று சின்னசேலம் ரெயில் நிலையம் முன்பு வந்தனர்.

அங்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் பேரிகார்டு அமைத்து, அவர்களை தடுத்து நிறுத்தினர்.

கர்நாடக அரசை கண்டித்து கோஷமிட்ட அவர்கள், ரெயில் மறியல் செய்ய முன்னேறிச் சென்றனர். இதையடுத்து ஆதிதிராவிடர் புரட்சிக்கழகத்தை சேர்ந்த 50 பேரை போலீசார் கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்