< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விபத்தில் கவிழ்ந்த லாரி... ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் - பரிதாபமாக பார்த்துச் சென்ற மதுப்பிரியர்கள்
|12 Jun 2022 5:00 PM IST
கோவை சூலூர் அருகே விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரியில் ஏற்றி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.
கோவை,
கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் உள்ள கொச்சின் பைபாஸ் சாலையில், பூந்தமல்லியில் இருந்து பீலமேடு பகுதிக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி ஒன்று, இன்று அதிகாலை 4 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர்தப்பினார். ஆனால் லாரியில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,200 மதுபாட்டில்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே அவ்வழியாக சென்ற மதுப்பிரியர்கள் பலர் கவிழ்ந்து கிடந்த லாரியையும், உடைந்து கிடந்த மதுபாட்டில்களையும் பரிதாபமாக பார்த்துச் சென்றனர்.