வேதாரண்யம் தனியார் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்...!
|வேதாரண்யம் தனியார் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது.
நாகை,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்று உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 190 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை விடுதியில காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
ஏற்பட்டது. உடனடியாக மாணவிகளை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விடுதியில் மாணவிகள் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் அளித்தாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.