< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்: 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர்: 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தினத்தந்தி
|
5 Jun 2022 11:06 AM IST

சோழவரம் அருகே தனிநபர் பயன்பெயரில் பட்டா பெறப்பட்டு பயன்பாட்டில் இருந்த 15 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் 15 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்து தனிநபர் பெயரில் பட்டா பெறப்பட்டு பயன்பாட்டில் இருந்தன. இதனை ரத்து செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் நிலா சுரேஷ், துணை தலைவர் லட்சுமணன் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்த நிலையில் பொன்னேரி வருவாய்துறை பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரக்காடு பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஒரக்காடு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு முற்றுகையிட வந்தனர். அப்போது அங்கு வந்திருந்த வருவாய் துறை ஆய்வாளர் மதன்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தயார் நிலையில் இருந்த இயந்திரம் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் சுற்று சுவர்கள் அகற்றப்பட்டு இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என பெயர் பலகை வைக்கப்பட்டது இதனால் சுமார் 50 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சோழவரம் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

மேலும் செய்திகள்