< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் 5 வாலிபர்கள் பலி
|8 Sept 2023 4:40 AM IST
விபத்தில் 5 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
ராஜ்கோட்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தின் சஜாதியாலி கிராமத்தைச் சேர்ந்த திலீப் பூரியா (வயது 25), அர்ஜுன் மேதா (18), தினேஷ் ரத்தோட் (30) ஆகியோர் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சர்தார் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே, அதே பகுதியை சேர்ந்த தேவ்கன் மக்வானா (22) மற்றும் ராஜேஷ் ரத்தோட் (22) ஆகிய இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 5 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.