< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
28 April 2023 2:33 PM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை செங்கல்பட்டு வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்த அரசன் (வயது 52). இரு சக்கர வாகனத்தில் பேன்சி பொருட்கள் விற்பதற்காக திருப்போரூர் அருகே மானாமதி அடுத்த அருங்குன்றம் கிராமத்திற்கு அடிக்கடி வருவாராம். அப்போது சாக்லேட் வாங்கி தந்து அந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். 2017-ம் ஆண்டு மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர்களால் புகார் கொடுக்கப்பட்டு, அப்போதைய மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உஷா, அரசனை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் அரசன் தான் குற்றம் செய்யவில்லை என்று வாதாடி, செங்கல்பட்டு கோர்ட்டில் ஜாமீன் பெற்று வழக்கு நடத்தி வந்தார்.

சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். அரசன் 3 திருமணங்கள் செய்தவர் என்பதும் சம்பவத்தன்று சிறுமிக்கு ரஸ்னா, சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததும் அந்த சிறுமி கூச்சலிட்டபோது அவரை காப்பாற்றியவர்கள் சாட்சி சொன்னதன் மூலம் குற்றம் கோர்ட்டில் நிரூபனமானது. இதன் அடிப்படையில் குற்றம் உறுதி ஆனதால் செங்கல்பட்டு கோர்ட்டில் நரிக்குறவர் அரசனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும் செய்திகள்