< Back
மாநில செய்திகள்
சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
22 Jun 2023 1:09 AM IST

சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாங்குநேரி அருகே உன்னாங்குளத்தை சேர்ந்தவர் மணி (வயது 68). இவர் கடந்த 2020-ம் ஆண்டு 9 வயது சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி, குற்றம் சாட்டப்பட்ட மணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்று கொடுத்த நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்