தேஜஸ் உள்பட 5 ரெயில்கள் இன்று தாமதமாக புறப்படும் - அதிகாரிகள் தகவல்
|தேஜஸ் உள்பட 5 ரெயில்கள் இன்று தாமதமாக புறப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பின்வரும் ரெயில்கள் தாமதமாக புறப்படும். அதன்படி, மதுரையில் இருந்து தினமும் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:22672) இன்று மட்டும் மாலை 4.15 மணிக்கு (75 நிமிடங்கள் தாமதமாக) மதுரையில் இருந்து புறப்படும். மேலும் தஞ்சையில் இருந்து தினமும் மாலை 4.20 மணிக்கு திருச்சிக்கு புறப்பட வேண்டிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (எண்:06683) இன்று மட்டும் மாலை 5.10 மணிக்கு (50 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.
இதுபோல் இன்று மட்டும் திருச்சியில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் (எண்:06840) 90 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.15 மணிக்கும், மாலை 5.50 மணிக்கு மயிலாடுதுறை புறப்பட வேண்டிய ரெயில் (எண்:06414) 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.30 மணிக்கும், மாலை 6.20 மணிக்கு மன்னார்குடி புறப்பட வேண்டிய ரெயில் (எண்:06828) 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.45 மணிக்கும் புறப்படும்.அதுபோல், புதுச்சேரியில் இருந்து மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரிக்கு புறப்படும் ரெயில் (எண்: 16861) இன்று மட்டும் தேவையான இடத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.