நாகப்பட்டினம்
5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
|வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி கடல் சீற்றமாக காணப்பட்டது. மேலும் வானிலை ஆய்வு மையமும் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
வெறிச்சோடி காணப்பட்டது
ஒரு சில மீனவர்கள் மட்டும் கரையோரம் நேற்று காலை பைபர் படகு மூலம் மீன்பிடிக்க சென்ற நிலையில், காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக அந்த மீனவர்கள் கரை திரும்பினர்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.