< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
|8 April 2023 10:11 AM IST
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
நீலகிரி:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
உதகை அருகே உள்ள அரசு பள்ளியில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 கணித தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வுசெய்தனர்.
அப்போது மாணவர்கள் காப்பி அடிக்க ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய ஆசிரியர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.