< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது - இலங்கை கடற்படை அத்துமீறல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 5 பேர் கைது - இலங்கை கடற்படை அத்துமீறல்

தினத்தந்தி
|
23 Sept 2024 8:13 AM IST

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அண்மையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு மொட்டையடித்து அனுப்பி வைத்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் சிறை பிடித்துள்ளனர்.

கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்