< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
|4 Sept 2022 11:34 PM IST
மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
ஒரத்தநாடு
ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழஉளூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மனைவி சரஸ்வதி (வயது70). இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ராமகிருஷ்ணன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.