< Back
மாநில செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டில் 5 வீரர்கள் காயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வடமாடு மஞ்சுவிரட்டில் 5 வீரர்கள் காயம்

தினத்தந்தி
|
20 March 2023 12:05 AM IST

உசிலம்பட்டியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 5 வீரர்கள் காயம் அடைந்தனர்.

வடமாடு மஞ்சுவிரட்டு

அரிமளம் ஒன்றியம் மேல்நிலைவயல் ஊராட்சி உசிலம்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஐகோர்ட்டு விதிமுறைகள்படி நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 11 மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் மற்றும் வீரர்கள் டாக்டர் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியில் மாடுகளை அடக்குவதற்கு 25 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது. மேலும், 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் மாடுகளை அடக்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்குள் மாடுகளை அடைக்கினால் ரூ.5 ஆயிரத்து 1 மற்றும் சேர் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட்டன.

அமைச்சர் ரகுபதி சார்பில் அனைத்து காளைகளுக்கும் ரூ.1,001 சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி சார்பில் 2 வெள்ளி காசுகள் வழங்கப்பட்டன.

5 வீரர்கள் காயம்

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்ட 11 மாடுகளையும் வீரர்கள் அடக்கினர். இந்த போட்டியில் 5 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். பாதுகாப்பு பணியில் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உசிலம்பட்டி ஊரார்கள், அம்பலங்கள், இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்