சென்னை
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
|ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35), மதுரையை சேர்ந்த கார்த்திக் (26), அம்பத்தூர் போலீஸ் நிலைய பகுதிகளில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த விமல் (45), கொரட்டூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நிஷாந்த் (27), காட்டூர் போலீஸ் நிலைய எல்லையில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னேரி அடுத்த நெய்தவாயல் புதுப்பேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய 5 பேரையும் தொடர் குற்றங்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.