< Back
மாநில செய்திகள்
காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்ற 5 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்ற 5 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம்

தினத்தந்தி
|
21 July 2023 11:59 PM IST

காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்ற 5 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கூறு போட்டு விற்பனை

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஸ் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகணேஷ் மற்றும் மதுரை உதவி வன பாதுகாவலர் மனாசீர் ஹலீமா ஆகியோரின் உத்தரவின்படி வனச்சரக அலுவலர்கள் பழனிகுமரன், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் ஆகியோர் கொண்ட கூட்டுக் குழுவினர் செஞ்சேரி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெகன், அறிவழகன், ராஜ்குமார், சுரேஷ், தியாகு ஆகியோர் அடங்கிய குழுவினர் காட்டுப்பன்றியை கூறு போட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

அபராதம்

இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு அபராதமாக மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்