விழுப்புரம்
சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை
|வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வளவனூர் பேரூராட்சி தலைவர் தகவல்
வளவனூர்
வளவனூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தின் படி வளவனூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான தங்களது சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதன் மூலம் வளவனூர் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவிப்பு குறித்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா மற்றும் செயல் அலுவலர் ஷேக்லத்தீப் ஆகியோர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.