திருவள்ளூர்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்
|திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து (வயது 33), வெங்கடேசன் (31). 2 பேரும் விறகு வெட்டும் வேலை செய்து வருகின்றனர். பூனிமாங்காடு பகுதியில் வேலைக்கு சென்று விட்டு, நேற்றுமுன்தினம் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
சிவாடா அடுத்த ஜெயராமபுரம் கிராமம் அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
5 பேர் படுகாயம்
இந்த விபத்தில் மாரிமுத்து, வெங்கடேசன், மற்றொரு மோட்டார் சைக்கிளளில் வந்த என்.என்.கண்டிகையை சேர்ந்த பிரசாந்த் (28), சிவாடா கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (27), சபரி (20) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.