தேனி
மதுபானம் விற்ற 5 பேர் சிக்கினர்
|கடமலைக்குண்டு, போடி பகுதிகளில் மதுபானம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டு போலீசார் கரட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடை அருகே நின்று மதுபானம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ராமர் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தும்மக்குண்டு வைகை ஆற்று பாலம் அருகே மதுபானம் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த மாயி (55), சிங்கராஜபுரம் சுடுகாடு அருகே மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (44) ஆகிய 2 பேரையும் வருசநாடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போடி தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி அருகே உள்ள விசுவாசபுரம் கிராமத்தில் உள்ள தேவர் சிலை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விசுவாசபுரத்தைச் சேர்ந்த பழனி (64) என்பதும், விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதேபோல், நாகலாபுரம் விலக்கு அருகே மதுபானம் விற்ற குச்சனூர் நடுத்தெருவை சேர்ந்த கணேசன் (53) என்பவரை போலீசாா் கைது செய்தனர்.