< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

தினத்தந்தி
|
26 Oct 2023 12:38 PM IST

ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த செக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (வயது 25). இவர் ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் வசிக்கும் அவரது அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 21-ந்தேதி அவரது நண்பர்கள் விக்னேஸ்வரனை தனியாக அழைத்து சென்று சரமாரியாக தாக்கி கல்லால் முகத்தை சிதைத்து படுகொலை செய்தனர்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஆவடி புதிய கன்னியம்மன் நகர் பகுதியில் குடியேறி அங்கு வசித்து வரும் சூரியகுமார் (25), ஆனந்தராஜ் (24) கார்த்திக் (23) ஐயப்பன் (33) லியாண்டர் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்