< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
|10 Oct 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்:
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வளவனூர் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சாலையாம்பாளையத்தை சேர்ந்த சேகர் (66), பனங்குப்பம் சந்துரு (40), நன்னாட்டாம்பாளையம் பரந்தாமன் (45) ஆகியோரை வளவனூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தோகைப்பாடி பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நித்யா (41) என்பவரை காணை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்கள் 5 பேரிடமிருந்தும் மொத்தம் 675 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.