< Back
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகளை விற்க கொண்டு வந்த 5 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

லாட்டரி சீட்டுகளை விற்க கொண்டு வந்த 5 பேர் கைது

தினத்தந்தி
|
25 Oct 2023 12:30 AM IST

கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு லாட்டரி சீட்டுகளை விற்க கொண்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் நகர மேற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த 5 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தேவம்பாடிவலசை பகுதியை சேர்ந்த முருகன் (வயது 49), பழனியை சேர்ந்த கோபால் (54), திருவாரூர் மன்னார்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (75), புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா(36), திண்டுக்கல்லை சேர்ந்த ஜாகீர்உசேன் (44) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3,500 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்