செங்கல்பட்டு
ஓட்டேரி, மறைமலைநகர் பகுதிகளில் மது விற்ற 5 பேர் கைது
|ஓட்டேரி, மறைமலைநகர் பகுதிகளில் மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம், இரணியம்மன் நகர் அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை பகுதியை சேர்ந்த சூரியபிரசாத் (வயது 24), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 8 மதுபானம் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மண்ணிவாக்கம் புதுநகர், ரோஜா பூ தெருவில் மது விற்பனை செய்து கொண்டிருந்த முத்து (36), வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே மது விற்ற போஸ் (54), வண்டலூர் வெளிவட்ட மேம்பாலம் அருகே மது விற்ற மணிகண்டன் (22), ஆகிய 4 பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் பகுதியில் மது விற்ற மணி (28), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.