< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மதுபானம் விற்ற 5 பேர் கைது
|21 Oct 2023 3:00 AM IST
திண்டுக்கல்லில் மதுபானம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா, ஏ.வெள்ளோடு, மஞ்சநாயக்கன்பட்டி, தர்மத்துப்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்தந்த பகுதிகளில் மதுபானம் விற்றதாக எரியோட்டை சேர்ந்த சிவக்குமார் (வயது 25), ஏ.வெள்ளோட்டை சேர்ந்த அருள் ஞானபிரகாசம் (29), மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயன் (46), தர்மத்துப்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் (37), நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மயில்சாமி (45) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.