< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது

தினத்தந்தி
|
11 March 2023 12:15 AM IST

சொத்தவிளையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்:

சொத்தவிளையில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சொத்தவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக 2 மோட்டார் சைக்கிள்களுடன் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனையிட்ட போது கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள வேதநகர் ஹவ்லாநகரை சேர்ந்த அஸ்லாம் (வயது26), வட்டவிளையை சேர்ந்த முகம்மது அப்சர் (20), பீச்ரோடு பெரியவிளையை சேர்ந்த சார்லஸ் மில்டன் (21), கீழசரக்கல்விளை, ரஹ்மத் கார்டனை சேர்ந்த அப்துல் ஜவாத் (24) மற்றும் பறக்கை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

5 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது ெசய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்