< Back
மாநில செய்திகள்
50 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

50 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

தனுஷ்கோடி கடல் பகுதியில் 50 கிலோ கடல் அட்டைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பனைக்குளம்,

50 கிலோ கடல் அட்டை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பல் ஒன்றில் ராமேசுவரத்திற்கும்-தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட வடக்கு கடல் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் அந்த கடல் அட்டைகளையும், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

5 பேர் கைது

மேலும், கடல் அட்டைகளை பிடித்ததாக மண்டபத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 42), முருகேசன்(55), அருண்குமார்(33), சரவணன்(44) முனியாண்டி(51) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் பிடிபட்ட 5 பேரையும் மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மண்டபம் வனச்சரக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கடற்கரைக்கு கொண்டு வந்து பதப்படுத்தப்பட்ட பின்னர் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்