< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி அருகே கோவில் கோபுர கலசங்களை திருட முயன்ற 5 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பூந்தமல்லி அருகே கோவில் கோபுர கலசங்களை திருட முயன்ற 5 பேர் கைது

தினத்தந்தி
|
10 July 2023 4:23 PM IST

பூந்தமல்லி அருகே கோவில் கோபுர கலசங்களை திருட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருட முயற்சி

பூந்தமல்லி அடுத்த திருமணம் கிராமத்தில் பழமையான சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தில் 7 செப்பு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் 5 பேர் சுந்தராஜ பெருமாள் கோவில் ராஜகோபுரத்தில் ஏறி கலசங்களை திருட முயன்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவர்கள் வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

கைது

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் கோபுர கலசங்களை திருட முயன்றது தொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த மாதவன் (வயது 52), லோகநாதன் (51), கோபால் (48), சற்குணம் (54), லோகேந்திரன் (61) ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் சுந்தரராஜ பெருமாள் கோவில் கோபுர கலசங்களில் இரிடியம் இருக்கலாம் என கருதி அதனை திருட முயன்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்