< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே துணிக்கடை உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 5 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே துணிக்கடை உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 5 பேர் கைது

தினத்தந்தி
|
26 Feb 2023 2:15 PM IST

மீஞ்சூர் அருகே துணிக்கடைகாரரை மிரட்டி மாமூல் கேட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மீஞ்சூர் அருகே உள்ள அரியன்வாயல் கிராமத்தில் வசிப்பவர் சித்திக்பாஷா (வயது 53). இவர் மீஞ்சூர் பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் இருக்கும்போது ஒருவர் சித்திக்பாஷாக்கு போன் செய்து தனது ஆட்கள் வருவார்கள் அவர்கள் கேட்கும் மாமூலை அவர்களிடம் கொடுத்து விடு என்று மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து சித்திக்பாஷா கடையில் இருக்கும்போது 5 பேர் கும்பல் அவரிடம் பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி மிரட்டினர். அதற்கு சித்திக்பாஷா கடையில் இருந்த பணத்துக்கு சரக்கு போட்டு விட்டேன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து அந்த கும்பல் நாளை வருவோம் அண்ணன் தேவராஜ் கூறியபடி தாங்கள் கேட்ட மாமூலை கொடுத்துவிட வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தனர். பின்னர் இதைபோல் மற்றொரு கடைக்கும் சென்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்திக்பாஷா மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தேவராஜ் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாமூல் கேட்டு துணிக்கடைகாரரை மிரட்டிய முகேஷ், தீபக், சந்தோஷ், கண்ணன், சரத்ராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்