< Back
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

தினத்தந்தி
|
15 Dec 2022 10:43 PM IST

திண்டுக்கல், பழனியில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனி டவுன் போலீசார் பஸ்நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அடிவாரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 23) என்பதும், கேரள லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. அதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அடிவாரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற பழனி தட்டான்குளத்தை சேர்ந்த செல்வராஜ் (45) என்பவரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில், பழனி சாலையில் உள்ள வெங்காய பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஆர்.வி.நகரை சேர்ந்த கண்ணன் (49), சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த அறிவழகன் (27), சீதாகவுண்டனூரை சேர்ந்த ரெங்கநாதன் (37) ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் 25 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்