தேனி
கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது
|பெரியகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், தேனி-திண்டுக்கல் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாமரைக்குளம் பிரிவு அருகே சென்றபோது போலீசாரை கண்டதும், 2 பேர் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பெரியகுளம் கோட்டைமேடு தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 23), ஸ்ரீதர் (26) என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பெரியகுளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான போலீசார், பைபாஸ் சாலையில் வெள்ளைக்கரடு அருகே ரோந்து சென்றனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெரியகுளம் மில்லர் ரோட்டை சேர்ந்த கிருபானி (23), தேவதானப்பட்டி அருகே உள்ள அம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (28), ஆனந்தகுமார் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.