< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

தினத்தந்தி
|
4 Sept 2023 1:31 AM IST

நெல்லை அருகே கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் விடுதி அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் தாழையூத்து சங்கர்நகர் சாரதாம்பாள் நகரை சேர்ந்த சுபாஷ் (வயது 22), சந்துரு (21), லோகேஷ் ராஜா (20), கயத்தாறு லூர்து மாதாகோவில் தெருவை சேர்ந்த காசிபாண்டி (19), பள்ளிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (19) ஆகியோர் சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்