< Back
மாநில செய்திகள்
சூதாடிய 5 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

சூதாடிய 5 பேர் கைது

தினத்தந்தி
|
18 Oct 2023 12:30 AM IST

நெகமம் அருகே சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.



நெகமம் அடுத்த சுந்தரகவுண்டனூர் அருகே பணம் சூதாட்டம் நடைபெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நெகமம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் விளாமரத்துப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (வயது 37), ராமு (33), அருண் (37), சுண்டக்காம்பாளையம் லிங்குசாமி (28), புக்குளம் காளிமுத்து (47), சுந்தரகவுண்டனூர் சென்னியப்பன் ஆகிய 6 பேரை சுற்றி வளைத்தனர். ஆனால் சென்னியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற 5 பேரும் போலீசில் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்