< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொழில்துறை சார்பில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - முதல்-அமைச்சர் முன்னிலையில் இன்று பரிமாற்றம்
|6 July 2022 6:40 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை,
தொழில்துறை சார்பில் டைசன் நிறுவனமானது பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பரிமாற்றம் செய்ய உள்ளது.
பின்னர் ஒரகடம் மருத்துவ சாதன உற்பத்தி பூங்கா, சிறுசேரி தகவல் தொழிநுட்ப பூங்காவில் உள்ள ஏற்றுமதி வணிக வசதி மையம், பெருந்துறை ஆண்கள் தங்கும் விடுதி, இருங்காட்டுக்கோட்டை தொழில் பூங்காவில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்.
மேலும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் கட்டுமான விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் முதல்-அமைச்சர் இன்று வழங்க உள்ளார்