< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
3 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி
|1 April 2023 12:15 AM IST
விபத்தில் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் 3 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் தலைமை தாங்கி பணியின் போது விபத்தால்் பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். நிகழ்சசியில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாரி, தொழிலாளர் நலத்துறை கண்காணிப்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.